சினிமா

நடிகர் வடிவேலு மனைவிக்கு  வருவாய்த் துறையினர் நோட்டீஸ்?

காஞ்சிபுரம் மாவட்டம், புஷ்பகிரி பகுதியில் அரசு மேய்க்கால் புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களை 15 நாட்களுக்குள்

தினமணி

காஞ்சிபுரம் மாவட்டம், புஷ்பகிரி பகுதியில் அரசு மேய்க்கால் புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களை 15 நாட்களுக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும் என 19 பேருக்கு வருவாய்த் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதில் நடிகர் வடிவேலுவின் மனைவி விசாலாட்சிக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புஷ்பகிரி பகுதியில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடங்களை மணிமங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த சிலர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்து ஆந்திர மாநில விவசாயிகளுக்கு விற்றுவிட்டனர்.
 அந்த இடங்களில் ஆந்திர மாநில விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். நாளடைவில் விவசாயப் பணிகளுக்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால் ஆந்திர மாநில விவசாயிகள் அந்த இடங்களை நடிகர்கள் மற்றும் தனியார்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விற்றுவிட்டனர்.
 தற்போது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மனைவி விசாலாட்சி உள்பட 19-க்கும் மேற்பட்ட வெளியூர் பகுதியைச் சேர்ந்த தனியார் சிலர் அரசு புறம்போக்கு இடம் சுமார் 130 ஏக்கரில் தனித்தனியாக மா, தேக்கு மற்றும் தென்னை தோப்புகள் அமைத்து பண்ணை வீடுகளாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
 இந்நிலையில் புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலு மனைவி விசாலாட்சி உள்பட 19 பேர் ஆக்கிரமித்து வைத்துள்ள சுமார் 60 ஹெக்டர் பரப்புள்ள அரசு புறம்போக்கு இடங்களை வரும் 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என படப்பை வருவாய் துறை ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான வருவாய்த் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
 தாமதமான நடவடிக்கை: மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புஷ்பகிரி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான அரசு புறம்போக்கு இடங்கள் சுமார் 50 ஆண்டுகளாக ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 ஆனால் தற்போது தான் வருவாய்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனை 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே வருவாய்த் துறையினர் செய்து இருக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக் கோடி போராட்டம்: ஏராளமானோர் கைது

ஜன நாயகன் இசை வெளியீட்டில் இணையும் பிரபலங்கள்!

சரிந்து மீளும் பங்குச்சந்தை! ஐடி, மீடியா பங்குகள் கடும் சரிவு!

சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த தங்கம் விலை!

நாளை மறுநாள்(நவ.27) சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

SCROLL FOR NEXT